பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 27 கடந்த வாரம் CHANNEL என்ற வடிவத்தின் ஆதி அந்தம் பார்த்தோம், இப்பொழுது மீதம் உள்ள சில விசயங்களை பற்றி பார்ப்போம், அதன் அடிப்படையில் FLAG PATTERN, PENNANT PATTERN , W PATTERN போன்றவைகளை பற்றி பார்ப்போம்,,, FLAG PATTERN பொதுவாக இந்த வடிவம் அடிக்கடி தொடர் உயர்வுகளுக்கு இடையே ஏற்படும், இது போன்ற அமைப்புகள் பார்ப்பதற்கு கம்பத்துடன் கூடிய கொடிகளை ஞாபக படுத்துவதால் இதற்க்கு இந்த பெயர் வைத்தார்கள், அதாவது நாம் முன்னர் பார்த்த வடிவங்களில் (HEAD&SHOULDER, CUP, TRIANGLE, CHANNEL) BREAK OUT என்ற நிலையை பெற்று ஒரு பங்கு உயரும் போது ஒரு குறிப்பிட்ட தொலைவை அடைந்த பிறகு சற்று இளைப்பாறல் அடைவதற்காகவோ அல்லது கொஞ்சம் PROFIT BOOKING செய்வதர்க்காவோ சற்று தயங்கி பிறகு தனது இலக்குகளை நோக்கி நகர முற்படும், இது போன்று தயங்கி நிற்கும் செயல் சில நாட்களுக்கு நடைபெறும், இது போன்று நடைபெறும் செயல்கள் ஏதோ வாச்சான் போச்சான் கதையாக இல்லாமல் அதற்க்கென்று சில விதிமுறைகளை வைத்து செயல்படுவார்கள், இவ்வாறு ச...