பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 17
பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 17 ADX கடந்த வாரம் ADX என்ற indicator ஐ பற்றி பார்த்து கொண்டிருந்தோம் இல்லையா, இப்பொழுது முழுமையாக அதைபற்றி பார்ப்போம், adx என்ற indicator இல் மூன்று விதமான கோடுகள் இருக்கும் என்றும் அதில் இரண்டு கோடுகள் முறையே D+, D-, என்றும், மற்றது ADX என்ற வினை ஊக்கி என்றும் பார்த்து கொண்டிருந்தோம் இல்லையா, சரி இப்பொழுது இந்த மூணு கோடுகளையும் பயன் படுத்தி எப்படி நமது வர்த்தகத்தை சரியாக செய்யலாம் என்று பார்ப்போம், இந்த adx என்ற கோடானது ஒரு குறிப்பிட்ட பங்கில் நடந்து கொண்டிருக்கும் trend ஐ உறுதிபடுத்தும் ஒரு கோடாகும், அதாவது D+ என்ற கோடானது D- என்ற கோட்டை மேலே கடந்து செல்லும் பட்சத்தில் அந்த பங்கை நாம் வாங்கலாம் என்று அர்த்தமாகும், அதே நேரம் இந்த D+ கோடானது மேலே தொடர்ந்து உயரும், இதற்க்கு எதிராக D- என்ற கோடு கீழே வரும், இப்படி நடந்து கொண்டிருக்கும் போது இந்த D+ என்ற கோட்டை தொடர்ந்து, மேலே சொன்ன ADX என்ற கோடும் உயரே செல்லும்! இப்படி சென்றால் அந்த buying trend நல்ல சக்தியுடன...